மோடியை நறுக்குன்னு 4 கேள்வி கேளுங்க: மாணவர்ளை தூண்டிவிடும் ராகுல்

modi
Last Modified வியாழன், 3 ஜனவரி 2019 (15:08 IST)
ரபேல் சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிய பிரதமர் மோடியை ராகுல்காந்தி கிண்டலடித்து பேசியுள்ளார்.
 
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
 
நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வழக்கில், முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சுப்ரிம்கோர்ட் பாரபட்சமாக செய்ல்பட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தினர்.
 
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல், ரபேல் கேள்விகளுக்கு பயந்துபோய் தான் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களுடன் உரையாற்ற சென்றுவிட்டார் எனவும் மாணவர்கள் டிவிட்டரில் தாம் பதிவிட்ட 4 கேள்விகளை மோடியிடம் கேளுங்கள் எனவும் டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :