1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (13:29 IST)

கருப்பைக் கண்டாலே அலறும் பாஜக – ஜார்க்கண்ட்டில் கருப்பு சாக்ஸ், பர்ஸ், தொப்பிக்குத் தடை !

பிரதமர் மோடி ஜனவரி 5 ஆம் தேதி ஜார்கண்ட் செல்ல இருப்பதை அடுத்து அங்கு கருப்பு சாக்ஸ், பர்ஸ், தொப்பிகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பலாமு மாவட்டத்தில் 80000 ஆசிரியர்கள், தங்கள் வேலைகளை முறையாக வகைப்படுத்த வேண்டும் எனக் கூறி கடந்த 45 நாட்களாகப் போராடி வருகின்றனர். மேலும் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

இந்நிலையில் மண்டல் அணை நீர்ப்பாசன திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜார்கண்ட் செல்ல இருக்கிறார். இதனால் அங்கு போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மோடியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடிக் காட்டிப் போராடலாம் என மத்திய அரசும் மாநில அரசும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே மோடி வருகையை ஒட்டி பாலாமு மாவட்ட நிர்வாகம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் ‘ அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கருப்பு சாக்ஸ், பர்ஸ், தொப்பி, கைக்குட்டை, பை, துணிகள் என எந்தப் பொருட்களையும் கருப்பு நிறத்தில் உபயோகப்படுத்தக் கூடாது’ என அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் ஜார்க்கண்ட்டில் தற்போது சர்ச்சை உருவாகி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டியும், கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் ஆக்கியும் தமிழர்கள் அச்சத்தை அளித்தன்ர். அதேப் போல ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் மோடி ஆந்திராவிற்கு வரும் போது கருப்புக்கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இப்போது ஜார்க்கண்ட்டில் இந்த உத்தரவு மூலம் தென் இந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் மோடிக்கும், மோடியின் ஆட்சிக்கும் செல்வாக்குக் குறைவதையே காட்டுகிறது.