1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified சனி, 3 டிசம்பர் 2022 (08:58 IST)

தொடங்கியது கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்! – எக்கச்சக்கமாய் உயர்ந்த விமான டிக்கெட்!

Flight
டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை பல நாடுகள் விமர்சையாக கொண்டாடுகின்றன. டிசம்பரில் குளிர் பிரதேச நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட பலரும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர்.

வெளிநாடு செல்ல இயலாதவர்கள் கோவா, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கொண்டாடுகின்றனர். இதனால் பொதுவாக டிசம்பர் மாதத்தில் அனைத்து விமானங்களும் முழு அளவு பயணிகளுடன் பயணிக்கிறது. பலரும் வெயிட்டிங்கில் இருந்து செல்ல வேண்டிய அளவு டிமாண்ட் உள்ள நிலையில் விமான டிக்கெட் விலையும் உயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில் கோவாவுக்கு செல்ல கட்டணம் ரூ.4500 வரை இருந்த நிலையில் தற்போது ரூ.14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே கொச்சி, ஸ்ரீநகர், சண்டிகர், லடாக், கோவா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கான விமான டிக்கெட் உயர்ந்துள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவே இடம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.