வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2022 (22:48 IST)

சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விபத்து.... 7 பேர் பலி என தகவல்

சத்திஸ்கர் மாநிலம் மால்கான் ஒரு சுண்ணாம்புச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மால்கான் என்ற கிராமத்தில் ஒரு சுண்ணாம்புக் கல் சசுரங்கம் உள்ளது.  இந்தச் சுரங்கத்தின் மேற்பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்ததது.

அப்போது, சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காயங்ககளுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.