வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (14:43 IST)

கணிசமாக உயரும் விமான டிக்கெட் கட்டணம்!!

எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் படைகளை நாட்டிற்குள் புகுந்து ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என சரமாரியாக கொன்று வருவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் ரஷ்ய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்பட்ட நிலையில் ரஷ்ய வீரர்கள் 9111 பேர்களை கொன்று விட்டோம் என உக்ரைன்  அரசு தெரிவித்துள்ளது. 
 
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் விமான டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 119 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. 
 
கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களுக்கான எரிபொருள் விலை 57% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க விமானக் கட்டணத்தை உயர்த்த விமான நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்.