நடனப் பெண் மீது துப்பாக்கிச் சூடு ! பரபரப்பு சம்பவம் !
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இளம் நடனப் பெண் ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் என்ற பகுதியில் திருமண விழா நடைபெற்றது. அதில், ஒரு பெண் தனது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று இளம்பெண் தனது நடனத்தை நிறுத்தினார். அதைப் பார்த்த அரங்கில் இருந்த நபர், நடனம் ஆடுமாறு அவரை வற்புறுத்தினார்.அதற்கு அப்பெண் எதோ கூறியதாகத் தெரிகிறது.
அதனால் ஆத்திரம் அடைந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் இளம்பெண்ணை முகத்திலேயே சுட்டார். இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் வீடியோவாக படம் பிடித்ததாகத் தெரிகிறது. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சுடப்பட்ட பெண் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.