1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:21 IST)

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 11 பேர் பலி..100க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு நிவாரண நிதி அறிவிப்பு

MADHYA PRADESH
மத்திய பிரேதேசத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு.

மத்திய பிரேதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹர்தா என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட  வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பெரும் விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீப்பரவியதால் குடியிருப்புவாசிகள் பயத்தில் உள்ளனர்.

மேலும், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு, இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.