1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (20:55 IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 6 பேர் உயிரிழப்பு..! 40க்கும் மேற்பட்டோர் காயம்

fire mp
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீப்பற்றி ஏறிய தொடங்கியது. மேலும் ஆலையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கின. பட்டாசுகள் பயங்கர சட்டத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
 
இதுகுறித்து ஆலை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்க அவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
 
இந்த கோர தீ விபத்தில் இதுவரை 6பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
 
வெடி விபத்துக்கான காரணம் குறித்து மத்திய பிரதேச மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனிடையே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 
இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது