1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (17:31 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி!

mk stalin- pinarayi vijayan
மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரளம் அரசுக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரளம் முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளம் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம்  ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், ‘’மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளதுடன்,  இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது என்றும், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரளம் அரசுக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கும் ,கேரளம் எம்.பிக்கள் போராட்டத்தில் திமுக எம்பிக்களும் பங்கேற்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இதற்கு கேரளம் முதல்வர் பினராயி விஜயன்  நன்றி தெரிவித்துள்ளார்.