திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (14:23 IST)

வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றது.
 
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370 வது பிரிவு நீக்கப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இன்று, ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்; அவர் மீதான கைதான நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.