Daily Horoscope
✕

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது; சஞ்சய் நிருபம்

Updated: திங்கள், 18 டிசம்பர் 2017 (19:45 IST)
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டியுள்ளார்.

 
நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது. பாஜக வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரமே காரணம் என மகராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
குஜராத் முழுவதும் பாஜக எதிரான அலை வீசியது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது கூட பல இடங்களில் இருக்கைகள் காலியாக இருந்தன. இந்நிலையில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தால் கிடைத்த வெற்றி ஆகும். 
 
துவக்கத்தில் இருந்தே எங்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. நாளை 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலி.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. மொத்தம் 6 தொகுதிகள் காலி..

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாரபட்சமாக செயல்படுகிறார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி...

இந்த கார் வேண்டாம், நான் கேட்கும் கார் தான் வேண்டும்.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்த்ய காவல்துறை அதிகாரி...

அடுத்த கட்டுரையில்
Show comments