1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (17:32 IST)

பாஜக முதல்வர் வேட்பாளரை வீழ்த்திய காங்கிரஸ்

இமாச்சலில் பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்துள்ளார்.

 
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டு மாநிலத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. குஜராத்தில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.
 
இமாச்சலில் பாஜக 44 தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக சார்ப்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். அதே தொகுதில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரஜிந்தர் ராணா 15,656 பெற்றுள்ளார். பிரேம் குமார் துமல் 12,836 வாக்குகள் பெற்றுள்ளார். 
 
இதனால் பாஜக கட்சியின் முதல்வர் பதவிக்கு வேறொரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.