திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. குஜராத் தேர்தல் முடிவுகள் 2017
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (15:43 IST)

குஜராத் தேர்தலில் ஆறுதல் வெற்றிப்பெற்ற மோடி

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் 2012ஆம் ஆண்டு தேர்தலை விட பாஜக குறைந்த அளவிலான இடங்களிலே வெற்றிப்பெற்றுள்ளது.

 
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பாஜக 98 இடங்களிலும், காங்கிரஸ் 81 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் தொடர்ந்து 6வது முறையாக பாஜக வெற்றி பெறுகிறது.
 
இருந்தாலும் குஜராத்தில் பாஜக வெற்றிப்பெற்றது பெரிய வெற்றியாக கருத முடியவில்லை. இது ஆறுதல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தேர்தலை விட தற்போது அதிக இடங்கள் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதை வெற்றியின் முதற்படியாக பார்க்கின்றனர். 
 
குஜராத்தில் நகர் புறங்களில் 55 தொகுதிகளில் 43-ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. கிராம புறங்களில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை பாஜகவின் தோல்விக்கு சாதகமாக அமைந்துள்ளது.
 
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவையால் அதிகம் பாதிக்கப்பட்டது கிராமப்புற மக்கள்தான். அதன் வெளிபாடாக குஜராத்தில் கிராமப்புறங்களில் பாஜக பல தொகுதிகளை இழந்துள்ளது.