ரிசல்ட்டே வரலை.. அதுக்குள்ள கொண்டாட்டம்! – நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முடிவுகளுக்கு முன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே 5 மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சியினர் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றதாக கொண்டாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.