1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK had lead in all Chennai constituencies

தலைநகரை பக்கா டார்கெட் செய்யும் திமுக! – சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். இதனால் தொடர்ந்து முன்னிலை வெற்றி வாய்ப்பாக மாறினால் சென்னை தலைநகர் முழுவதும் திமுக கையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
வெடி வைத்த அமமுக.. சட்டசபையில் அடி வைக்குமா? – குழப்பத்தில் கோவில்பட்டி நிலவரம்!