AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரத்த கட்டிகள் அகற்றம்: மருத்துவர்கள் சாதனை!
AI என்ற செயற்கை தொழில்நுட்பம் காரணமாக ஏராளமான வேலை இழப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கு மிகப்பெரிய நன்மையும் ஏற்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த ஆண்டு மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்திய நிறுவனங்கள் 7500 பேரை வேலை நீக்கம் செய்துள்ள நிலையில் இதே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தான் ரத்தக் கட்டிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றி சாதனை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானாவில் 62 வயது நபர் ஒருவரின் நுரையீரலில் இருந்த ரத்தக் கட்டிகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவர்கள் அகற்றி உள்ளதாகவும் முதல் முறையாக இந்தியாவில் இந்த அதிசயம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹரியானாவில் உள்ள வேதாந்தா என்ற மருத்துவமனை மருத்துவர்கள் தான் இந்த சாதனையை செய்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதேபோன்று செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவத்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தலாம் என்றும் மனித குலம் இன்னும் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva