திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:08 IST)

பிக்பாஸ் புகழ் எழுத்தாளர் பவா செல்லதுரைக்கு இதய அறுவை சிகிச்சை! – மருத்துவமனையில் அனுமதி!

Bava Chelladurai
பிரபல எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் பவா செல்லதுரை. வம்சி பதிப்பகம் என்ற புத்தக பதிப்பகத்தையும் நடத்தி வரும் பவா ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகில் கதை சொல்லி என அழைக்கப்படும் பவா, வெந்து தணிந்தது காடு, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவா பாதியில் கேமை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் இலக்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என இலக்கிய வாசகர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Edit by Prasanth.K