ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (12:41 IST)

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு புதிய சலுகை: அரசாணை வெளியீடு..!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
Non service முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் தற்போதைய அரசாணையில் இந்த விதிக்கு தளர்வு கிடைத்துள்ளது.
 
இதன்படி 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பதை 1 ஆண்டாக குறைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
மேலும் படிப்பை முடித்த பிறகு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள், ரூ.40 லட்சத்திற்கு பதிலாக, ரூ.20 லட்சம் கட்டினால் போதும் என்றும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேபோல் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.20 லட்சத்துக்கு பதிலாக ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran