இருமல் மருந்தால் 10 குழந்தைகள் மரணம் அடைந்த விவகாரம்: பரிந்துரை செய்த மருத்துவர் கைது..!
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 10 குழந்தைகள் மரணமடைந்த சோக சம்பவத்தில், இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டார்.
குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் மருந்தின் ஆய்வக சோதனையில் 48.6% டயத்லீன் கிளைக்கால் என்ற நச்சு இரசாயனம் கொண்டிருந்தது உறுதியானது. இந்த நச்சு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் சோனி மற்றும் இருமல் மருந்து உற்பத்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இருமல் மருந்தால் குறைந்தது 12 குழந்தைகள் இறந்த நிலையில் இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva