திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:57 IST)

காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: முன்னாள் பிரதமர் கடிதம்..!

காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
 
முன்னாள் பிரதமரான தேவகவுடா ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய முயற்சி செய்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.
 
இந்த நிலையில் காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடகாவில் அடுத்த 9 மாதங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை என்றும், குடிக்க தண்ணீர் இல்லாதபோது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது தவறான முடிவு என்றும், காவிரி விஷயத்தில் பொங்கி எழும் போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் தேவகவுடா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் காவிரி பிரச்சனையில் தலையிட்டு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்றும், உடனே 5 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து அணை நீர் இருப்பை ஆய்வு செய்ய  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva