வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:25 IST)

”ஆகஸ்டு 15 குடியரசு தினம்!!!”.. சொதப்பிய காவல்துறை

தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது குறித்து தில்லி காவல்துறை அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என இருந்துள்ளது.

இது குறித்து தில்லி உயர்நீதிமன்றம், தில்லி காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் இந்த பிழைக்கு காரணம் என்றும், இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.