தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி!

Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (22:47 IST)
புரோ கபடி போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
முதலில் நடைபெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும்
குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக காணப்பட்டாலும் தமிழ் தலைவாஸ் அணி ஓரிரு புள்ளிகள் அதிகமாக எடுத்து வந்தது. இரண்டாம் பாதியில் சுதாரித்து விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, அவ்வப்போது தேவையான புள்ளிகளை எடுத்ததால் ஆட்ட முடிவில் 34 புள்ளிகளை பெற்றது. குஜராத் அணியால் 28 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்ததால் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது
இதனையடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் புனே அணிகள் மோதின. இதில் டெல்லி 32 புள்ளிகளும், புனே 30 புள்ளிகளையும் பெற்றதால் டெல்லி அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டெல்லி அணியின் இந்த வெற்றியால் அந்த அணி 26 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் தலா 20 புள்ளிகள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :