புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (16:56 IST)

குற்றவாளியை திருமணம் செய்த பெண் போலீஸ் - போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை கொள்ளை, போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குண்டர் சட்டத்தில் கைதான ஒரு குற்றவாளியை , அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் காதலித்து கலியாணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பென் கான்ஸ்டபிள் ஒருவர்  குண்டர் சட்டத்தில் கைதான் ராகுல் தரசனா (30). என்கிற குற்றவாளியை அங்குள்ள நீதிமன்றதில் சந்தித்தபோது,இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ராகுல் சிறையில் இருந்தபோதும், வெளியில் வந்த பொழுதும் பெண் கான்ஸ்டபிள் பாயல் , அந்தக் குற்றாவாளியுடன் தொடர்பில் இருந்துவந்துள்ளார். 
 
இந்நிலையில் பல ஆண்டுகளாக காதலில் இருந்த இவர்கள் இருவரின் காதலும், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 
 
பெண் கான்ஸ்டபிள் இப்படி இரு குற்றவாளியை திருமணம்  செய்துள்ள சம்பவம், அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.