திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (13:21 IST)

அதிவேகத்தில் வந்த கார்; நிறுத்த முயன்ற காவலர்! – நொடி பொழுதில் நடந்த விபரீதம்!

டெல்லியில் அதிவேகத்தில் வந்த காரை நிறுத்த முயன்ற காவலரை கார் அடித்து தூக்கி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி துவாலா கவுன் நகரில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அதை அங்கிருந்த போக்குவரத்து காவலர் தடுக்க முயன்றபோது காவலர் மீது வேகமாக மோதியதால் காரின் மேல் காவலர் விழுந்தார். சில நூறு மீட்டர்கள் அந்த காரின் மீது காவலர் கிடந்தபோதும் கார் வேகமாக சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது தூரம் தாண்டியதும் கார் வேகமாக திரும்பியதில் காரின் மீது இருந்த காவலர் கீழே விழுந்தார். பின்னர் வேகமாக சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தியதோடு கார் ஓட்டியவரையும் கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.