புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (13:24 IST)

இந்துக்கள் வாழும் காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் திட்டம்! – உளவுத்துறை எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் நவம்பர் தொடங்கி ஜனவரி இறுதி வரை பல்வேறு பாரம்பரிய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் வகுப்பு வாத பிளவுகளை உருவாக்கும் நோக்கில் அல்-பத்ர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் மீது இந்த அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவதால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.