ஒரு வருடமாக கழிவறையே வீடு; கொடூர கணவனிடமிருந்து மீட்கப்பட்ட பெண்!

Prasanth Karthick| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (12:42 IST)
அரியானாவில் இளம்பெண் ஒருவர் தன் கணவனால் ஒரு வருட காலமாக கழிவறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் பானிபட் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் கழிவறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கழிவறை ஒன்றிலிருந்து உடல் மெலிந்த நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளனர். அவர் பல நாட்களாக பட்டினியாக கிடந்ததால் எழுந்து நடக்கவே சிரமமான நிலையில் இருந்துள்ளார். அவரிடம் பேசிய அதிகாரிகள் அந்த பெண் மனநலம் குன்றவில்லை என்றும், தெளிவாகவே உள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் எதற்காக வருடக்கணக்கில் பெண்ணை கழிவறையில் அடைத்து வைத்தார்கள் என்பது குறித்து பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :