வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (14:06 IST)

குர்ஆன் படிக்க அரசு செலவு செய்யமுடியாது; மதரஸாக்களை மூட முடிவு! – அசாம் அரசு அதிரடி!

அசாமில் மதரஸாக்களில் குர்ஆன் படிக்க அரசு செலவிட முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் மதரஸாக்களில் குர்ஆன் சொல்லி தர அசாம் அரசு செலவு செய்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா “குர்ஆன் அரசு செலவில் சொல்லிக் கொடுக்கப்பட்டால், அதுபோலவே பைபிளும், கீதையும் கூட அரசின் செலவில் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இனி குர்ஆன் படிப்பிற்கு அரசு செலவு செய்ய போவதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. அரசு உதவி பெறும் மதரஸாக்களை வழக்கமான பள்ளிகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் கணக்குகளை இந்து பெயரில் தொடங்கி இந்து பெண்களை காதலித்து மணம் முடிப்பதாகவும், இதுகுறித்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.