திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:59 IST)

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லையா? முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்

cyrus
டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று கார் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் சைரஸ் மிஸ்திரி காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வில்லை என்ற தகவல் திடுக்கிடும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது
 
காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்றும் முன் இருக்கையில் இருந்த இருவர் மட்டும்தான் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுக்கும் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது 
இந்த நிலையில் சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது