புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (09:48 IST)

வானத்திலிருந்து டைவ்; திறக்காத பாராசூட்! – டிக்டாக் பிரபலம் பரிதாப மரணம்!

Skydiving
கனடாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண் ஸ்கை டைவிங் செய்தபோது தரையில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் டோரண்டோ பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் தன்யா பர்டஷி. டிக்டாக் பிரபலமான இவர் சில ஆண்டுகள் முன்னதாக நடந்த “மிஸ் டீன் கனடா” அழகி போட்டியில் கலந்து கொண்டவர்.

ஸ்கை டைவிங்கில் ஆர்வம் கொண்ட தன்யா பலமுறை இருவர் குதிக்கும் ஸ்கை டைவிங் முறையில் உதவியாளருடன் வானத்தில் இருந்து குதித்துள்ளார். பின்னர் அதற்கென பயிற்சி பெற்று உரிமமும் வாங்கிய தன்யா தனியாக குதித்து டைவிங் சாகசம் செய்து வந்துள்ளார்.
Tiktok Celebrity

நேற்று தன்யா பர்டஷி டோரண்டோவில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் விமானத்திலிருந்து குதித்துள்ளார். தரையை நெருங்கிய நிலையில் பாராசூட்டை அவர் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாராசூட் முழுமையாக திறப்பதற்கு முன்பாகவே தன்யா பர்டஷி பரிதாபமாக தரையில் மோதி உயிரிழந்தார். இளம் டிக்டாக் பிரபல பெண் இவ்வாறாக உயிரிழந்த சம்பவம் கனடாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.