திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (17:55 IST)

டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!

cyrus
டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் பலி: தொழிலதிபர்கள் இரங்கல்!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி என்பவர் கார் விபத்தில் சற்றுமுன் உயிரிழந்தார். அவர் அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டிவைடரில் மோதியது.
 
 இந்த விபத்து காரணமாக இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் ஒருவர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து 201 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.