பிபோர்ஜாய் புயல் தாமதமாக கரையை கடக்கின்றதா? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?
அரபி கடலில் தோன்றிய பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த புயல் சற்று தாமதமாக கரையை கடக்க கூடும் என்று கூறப்படுகிறது.
இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக இன்று இரவு தரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
முன்னதாக இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நள்ளிரவு 11:30 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜக்காவு என்ற துறைமுகத்திற்கு 140 கிலோ மீட்டர் மற்றும் மேற்கு தென்மேற்கு மிகத் தீவிர புயல் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குஜராத் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
Edited by Siva