வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (14:17 IST)

கடலில் குதித்து வானிலை செய்தி வழங்கிய செய்தியாளர்! வைரல் வீடியோ

pakistan reporter
பாகிஸ்தான்   நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கடலில் குதித்து செய்தி வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக உருமாறியுள்ளது.

பிபர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வடக்கு நோக்கிச் சென்று கடந்து, அதிதீவிர புயலாக உருவானது.

இந்தப் புயல் இன்று குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது.

எனவே புயல் கரையைக் கடக்கும்போது கற்றி வேகம் மணிக்கு150 கிமீ வேகத்தில்  வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் இந்த பிபர்ஜாய் புயல் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, கடலில் ஆழம் பற்றிப் பேசும்போது, சட்டென்று கடலில் குதித்தார். அப்போதும் அவர் தன் கையில் இருந்த மைக்கை விடாமல் கடலின் ஆழம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.