வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2023 (12:50 IST)

புயல் உக்கிரத்தை குறைக்க பூஜை செய்த ஜடேஜா! – வைரலாகும் புகைப்படம்!

Super Cyclone
அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபோர்ஜாய் புயல் விரைவில் கரையை கடக்க உள்ள நிலையில் புயலுக்கு குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பூஜை செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.



அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபோர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ள நிலையில் ஜூன் 14ம் தேதி பாகிஸ்தான், சௌராஷ்டிரா பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபோர்ஜாய் புயலால் அரபிக் கடலோர மாநிலங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புயல் காரணமாக குஜராத்தின் குட்ச் மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

Gujarat MLA


இந்நிலையில் அப்பகுதிக்கு பயணம் செய்த பாஜக எம்.எல்.ஏ ப்ரதியுமான் சிங் ஜடேஜா அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து புயல் அந்த பகுதிகளை அதிகமாக பாதிக்கக் கூடாது என கடல்தாயை மனமுருகி வேண்டினார். பின்னர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K