1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (14:22 IST)

பிபர்ஜாய் புயல் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் அரசு..!

Super Cyclone
அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
 
பிபர்ஜாய் புயல்  இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள சிந்து கராச்சி ஆகிய மாநிலங்கள் வழியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள கடலோர மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் 66,000 பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
புயலின் பாதிப்பு என்ன என்பது நாளை தான் தெரியும் என்று கூறிய அமைச்சர் அதிகாரிகளுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 
 
அனைத்து நிவாரண பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தானில் புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran