திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (11:56 IST)

கிரிப்டோகரன்ஸி தடை செய்தி எதிரொலி: திடீரென சரிந்த மதிப்பு!

கிரிப்டோ கரன்சியை  மத்திய அரசு தடை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான புதிய மசோதா கொண்டுவரப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக பல வகையான தனியார் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் 69 ஆயிரம் டாலராக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது திடீரென சுமார் 55 ஆயிரம் டாலர் என உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதே போல் மேலும் பல தனியார் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு ஒரு சதவீதத்திற்கும் மேலாக சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.