திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (08:42 IST)

தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநிலங்கள்: மத்திய அரசு இன்று ஆலோசனை!

தடுப்பூசி குறைவாக போட்டு உள்ள நான்கு மாநில அரசிடம் இன்று முக்கிய ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுவை, நாகலாந்து, மேகாலயா மற்றும் மணிபூர் ஆகிய 4 மாநிலங்களில் தடுப்பூசி மிகவும் குறைவாக போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து இந்த நான்கு மாநில நிர்வாகிகள் இடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த நான்கு மாநிலங்களில் தடுப்பூசித் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வழிகாட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன