திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:25 IST)

விவசாயிகள் மசோதா திரும்ப பெற்றது குறித்து சூர்யா டுவிட்!

புதிய வேளாண்மை சட்டம் இன்று வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து விவசாயிகள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதுகுறித்து டுவிட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யா இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
உழவே தலை
 
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…