வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:35 IST)

மனிதர்களே போலவே மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ்!

மனிதர்களுக்கு உள்ளது போலவே பசு மாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குகிறது உத்தரப்பிரதேச அரசு. 

 
மனிதர்களே போலவே நோய்களால் அவதிப்படும் கால்நடைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் பசு மாடுகளின் உயிரை காக்கும் நோக்கில் கால்நடை மருத்துவர் 2 உதவியாளர்களுடன் ஆம்புலன்ஸ் சேவையை அடுத்த மாதம் துவங்குகிறது அரசு. 109 என்ற உதவி மைய எண் மூலமாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.