1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (10:59 IST)

பிரியங்கா சோப்ராவா? பிரியங்கா சதுர்வேதியா? காங்கிரஸ் கட்சியின் குழப்பத்தால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட டுவீட் ஒன்றை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு டேக் செய்வதற்கு பதிலால நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு டேக் செய்த விவகாரம் நெட்டிசன்களிடையே கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
 
விவசாயிகளுக்கு உதவும் வகையில் மண் பரிசோதனை மையங்கள் அமைத்து அதன் மூலம் பயிர்கள் இயற்கையாகவும், எளிமையாகவும் விளையும் வகையில் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்று பதிவு செய்யபப்ட்டது
 
இந்த டுவீட்டில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு டேக் செய்வதற்கு பதிலாக இந்த டுவிட்டர் பக்கத்தின் அட்மின், பிரியங்கா சோப்ராவுக்கு டேக் செய்துவிட்டார். இதனை பார்த்த டுவிட்டர் பயனாளிகள் கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். இதனையறிந்த காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் அட்மின் உடனடியாக அந்த டுவீட்டை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த டுவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர்.