ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (19:38 IST)

இதுவொரு கற்பனை கூட்டணி: ரஜினி-பாஜக கூட்டணி குறித்து இல.கணேசன்

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் ரஜினி கட்சி கூட்டணி சேரும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக்கொள்ளவில்லை என்றும் திமுக, அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்றும் பாஜகவிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில்தான் அமித்ஷா சென்னை வந்தபோது தமிழக அரசையும் தாக்கி பேசியதாக கூறப்பட்டது. எனவே வரும் தேர்தலில் ரஜினி கட்சி, பாஜக மற்றும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் காங்கிரஸ், கமல் கட்சி மற்றும் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த முறை அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் என்றும் அரசியல் ஆரூடங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், அமித்ஷா தமது பேச்சில் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் என்பது கற்பனை என்றும், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.