3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி...காங்கிரஸுக்கும், சீனாவுக்குமான ரகசிய உறவு - ஜே.பி நட்டா குற்றச்சாட்டு
இந்தியா – சீனா எல்லைக்கு இடையே சமீபத்தில் சீனா அத்துமீறியது. இதில், இந்தியா ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனையடுத்து, சீன வீரர்கள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.
இந்த நிலையில் உள்நாட்டில் சீனா பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என பிரபலங்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அதில், கடந்த 2005- 2006 ஆம் ஆண்டு காலத்தில் சீன அரசிடம் இருந்தும், சீன தூரகத்திடம் இருந்தும் 3 லட்சம் அமெரிக்க டாலர்களை ராகுல் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது. இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவையே காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் ரகசிய உறவு என அவர் தெரிவித்துள்ளார்.