1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (07:53 IST)

நாளை காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: புதிய தலைவர் ராகுல்காந்தியா?

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுவிருப்பதாகவும், இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ராகுல்காந்தி மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை டெல்லியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்  இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் விவகாரம், இந்திய எல்லையில் சீன ராணுவம் தாக்கிய பிரச்சினை, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  
 
கடந்த சில நாட்களாக சீன பிரச்சனை குறித்து ராகுல் காந்தி எழுப்பி வரும் ஆவேசமான கேள்விகள் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி ராகுல்காந்திக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதல், இந்திய நேபாளம் எல்லை விவகாரம், பொருளாதார மந்தநிலை ஆகியவை குறித்தும் கூட்த்தில் விவாதிக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.