செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (13:00 IST)

கலகலக்கும் சார் தாம் யாத்திரை; ஒரு மாதத்தில் 18 லட்சம் பக்தர்கள் பயணம்!

Char Dham
இமயமலை சார் தாம் யாத்திரை சீசன் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 18 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமயமலை தொடரில் உத்தரகாண்டில் அமைந்துள்ள கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் மே மாத காலத்தில் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டும் சார் தாம் புனித யாத்திரையில் பக்தர்கள் பலர் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரிக்கு புனித பயணம் மேற்கொண்டனர். பத்ரிநாத் கோவிலுக்கு 6,18,312 பக்தர்களும், கேதர்நாத் கோவிலுக்கு 5,98,590 பக்தர்களும் வருகை புரிந்துள்ளனர்.

அதுபோல கங்கோத்ரிக்கு 3,33,909 பக்தர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 பக்தர்களும் வருகை புரிந்துள்ளனர். மொத்தமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 லட்சம் பக்தர்கள் சார் தாம் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.