இனி 2ஜிபி வரை ஃபைல் ஷேர் செய்யலாம்.. அது மட்டுமா? – வசதிகளை அள்ளிக் கொடுத்த வாட்ஸப்!
பிரபல சமூக தொழில்நுட்ப செயலியான வாட்ஸப் தற்போது தனது செயலியில் மேலும் பல நவீன வசதிகளை மேம்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன் வளர்ச்சியால் மக்களிடையே செயலிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் அனைத்து விதமான தொடர்புகளுக்கும் மக்கள் முக்கியமாக பயன்படுத்தும் செயலியாக வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்ஸப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸப்பிலும் எமோஜி ரியாக்சன்களை அறிமுகப்படுத்தியது. தற்போது டெலிகிராம் போல வாட்ஸப்பில் அதிகபட்சம் 2 ஜிபி அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பிக் கொள்ளும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதுபோல வாட்ஸப்பில் தொடங்கும் குரூப்களில் இதுவரை 256 பேர் மட்டுமே இணைய முடியும் என்று இருந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 512 ஆக உயர்த்தியுள்ளது. வாய்ஸ் சாட்டிலும் ஒரே நேரத்தில் 36 பேர் வரை இணைந்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.