ஆதார் – பான் இணைப்பு: கால அவகாசம் நீட்டிப்பு!
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ல் முடியும் நிலையில் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.
பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிவடையும் நிலையில் பலர் ஆதான் –பான் எண்ணை இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்த நிலையில் 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
வருமானவரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இரண்டையும் இணைக்கும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.