திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 28 டிசம்பர் 2019 (18:24 IST)

#Thalapathy64update: டைட்டில் , பர்ஸ்ட் லுக் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் படத்தின் , டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில் சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
அதாவது,  தளபதி64 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31 டிசம்பர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த அடுத்த நொடியே விஜய் ரசிகர்கள் #Thalapathy64update என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.