1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (07:51 IST)

பேரணியா? பேச்சுவார்த்தையா? விவசாயிகள் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

இன்று பிற்பகல் 2 மணிக்கு விஞ்ஞான் பவனில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

 
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்பட ஒரு சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றனர். 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தியது. இதுவரை 5 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தது. 
 
புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்வது ஒன்றே இந்த போராட்டத்திற்கு முடிவாக இருக்கும் என்று விவசாயிகள் தரப்பினர் தெரிவித்து வருவதால் இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விஞ்ஞான் பவனில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 
 
அதன்படி இரு தரப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்று அனைவரும் காத்துகிடக்கின்றனர். அப்படி இந்த பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டவில்லை என்றால் சிங்கு, திக்ரி பகுதிகளில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.