1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (17:30 IST)

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் தொடர்ந்து 33 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து வரும்  30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
நாளை விவசாய சங்கப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தத்திட்டமிட்ட நிலையில், நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே பலகட்டங்களாக மத்திய அரசிற்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூக
உடன்பாடு எட்டப்படாததால் வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.