வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (07:34 IST)

பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த விவசாயிகள்: முடிவுக்கு வருமா போராட்டம்?

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட ஒரு சில மாநில விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
ஏற்கனவே மத்திய அரசு ஒரு சில முறை விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தது. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று 32வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பிற்கு விவசாயிகள் சங்கங்கள் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து 40 விவசாய சங்கங்கள் வரும் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன
 
இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டு விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கோரிக்கையான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், அடிப்படை ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்