கங்குலிபோல் சிக்சர் அடித்து...தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழகத்தைப் போல் விரைவில் மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது.
இத்தேர்தலில் வெற்றி பெறவேண்டிய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுள் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், மேறு வங்கத்தில் கங்குலிபோல் பாஜக சிக்சர் அடித்து வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிணாமுள் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தல் சீட் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை அக்கட்சியினரே அடித்து நொறுக்கினர்.
இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.